சனி, 18 பிப்ரவரி, 2023

நாடுகாண் பயணங்கள்

நாடுகாண் பயணம் என்பது நாடுகளை தேடிச்செல்லுதல் என்பதாகும். மறுமலர்ச்சியின் விளைவுகளால் ஏற்பட்ட புதிய நிலங்களைக் கண்டறிகின்ற முயற்சிகள் உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றன. நவீன காலத்தின் தொடக்கத்தினை இவை குறித்தன. கி.பி 1453 ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்துநோபிள் துறைமுகம் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பியர்கள் வர்த்தக தேவைக்காக புதிய நாடுகளுக்களை கண்டறிவதற்கு அதிக ஆர்வம் காட்டினர். புதிய நாடுகளை கண்டறியும் முயற்சியில் போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டன. இவற்றினைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ் என்பனவும் இம் முயற்சியில் ஆர்வம் காட்டின. இதன் விளைவாக ஆசியா, அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள நாடுகளை கண்டறிந்து ஐரோப்பியருக்கு தகவல் பெறக் கூடியதாக இருந்தது. நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் பலவாறு காணப்பட்டன. • நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் கீழைத்தேய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் மையமாக காணப்பட்ட கொன்ஸ்தாந்துநோபிள் கி.பி 1453 இல் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது. இப் பாதையினூடாகவே மேலைத்தேய நாடுகள் கீழைத்தேய நாடுகளுடன் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடாத்தி வந்தன. துருக்கியர்களின் கைப்பற்றல் காரணமாக இந்நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டன. ஐரோப்பியர்க ளுக்கு கீழைத்தேய நாடுகளிலிருந்து வாசணைப்பொருட்கள் தடையின்றி கிடைத்ததன் காரணமாகவே தமது உணவுப் பொருட்களை பழுதடையாமல் நீண்ட நாட்கள் அவர்களால் வைத்திருக்க முடிந்தது. அத்தோடு கொன்ஸ்தாந்துநோபிளின் வீழ்ச்சியின் பின்பாக ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கொன்ஸ்தாந்தநோபிளைக் கைப்பற்றிய துருக்கிய வர்த்தகர்கள் பொருள்களன் விலையை அதிகரித்தல், அத்தியாவசிய பொருட்களை உரிய வேளையில் வழங்காமை, இப்பகுதி வழியிலேயே செல்கின்ற கப்பல்கள் மீது பெருமளவு வரிகள் விதிக்கப்பட்டன இவற்றால மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஐரோப்பி நாடுகளுக்கு உண்டானது. அக்காலப்பகுதியில் பூமி தட்டையானது என்ற கருத்து நீண்டநாள் நம்பிக்கையாக இருந்து வந்தது. இத்தகைய நம்பிக்கையை போலந்து நாட்டு விஞ்ஞானி நிக்கலஸ் கொபர்னிக்கஸ் நிராகரித்து பூமி உருண்டையானது என்ற கருத்தினை முன்வைத்து நிருபித்தார். இப் பின்னணியில் உலகின் எப்பகுதியில் இருந்து புறப்பட்டாலும் மீண்டும் அதே இடத்தை வந்தடையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும் வடநட்சத்திரமாணியும், திசையறிகருவியும் கண்டுபிடிக்கப்பட்டது கடற்பயணத்தை இலகுவாக்கியது. இது நீண்ட கடற் பயணத்தை தொடருவதற்கான சந்தர்ப்பத்தினை உண்டாக்கியது. நாடுகாண் பயணங்களுக்கு தேசிய அரசுகளின் அனுசரணை கிடைத்தது முக்கியமாகும். நாடுகளை தேடிச் செல்லும் போது பல மாதங்கள் கடலில் பயணம் செய்ய வேண்டும். அத்தோடு பெருமளவு பணச் செலவும் ஏற்படும். இவ்வாறான நிலையில் தனியாரால் நாடுகாண் பயணங்கள் சாத்தியமற்றது. ஆனால் ஐரோப்பாவில் அக்காலத்தில் எழுச்சி பெற்ற தேசிய அரசுகள் நாடுகாண் பயணங்களுக்கு அனுசரணை வழங்கியமையானது அச் செயற்பாடு வெற்றியடைய காரணமாகியது. நாடுகாண் பயணங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வேண்டிய பண உதவி, படகு உதவி, நீர்வசதி போன்றவற்றை அக்கால அரசர்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர். போர்த்துக்கல் மன்னன் ஹென்றி, இங்கிலாந்து மன்னன் ஹென்றி, ஸ்பெயின் பேர்டினன், இசபெல்லா போன்றோரைக் குறிப்பிடலாம். நாடுகாண் பயணங்களுக்கு கப்பல் கட்டும் துறையில் ஏற்பட்ட விருத்தியும் மற்றுமொரு காரணமாகும். நீண்ட பயணங்கள் கடல் வழியாக மேற்கொள்ள வேண்டிருந்தமையினால் பாரிய கப்பல்களின் தேவை உணரப்பட்டது. இப் படகுகளை கட்டுவதில் ஒல்லாந்து முன்னணியில் திகழ்ந்தது. கரவல் எனப்படும் ஒரு வகையான மரத்தினால் ஆக்கப்பட்ட படகுகள் எடை குறைந்தவையாகவும், ஒரே சமயத்தில் பலர் பயணம் செய்யக் கூடியதுமான படகுகளை தயாரிப்பதில் ஒல்லாந்து முன்னிலை பெற்று விளங்கியது. பிற நாட்டவர்களும் இங்கே வந்து கப்பல் கட்டும் கலையை பயின்றனர். முஸ்லீம்களின் ஏகபோக உரிமையாகவுள்ள ஆசியாவின் வர்த்தகத்தை ஐரோப்பியரின் கைகளுக்கு கொண்டு வருவது போலவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில்கத்தோலிக்க சமயத்தை பரப்புவதும் ஐரோப்பியரின் நாடுகாண் பயணங்களின் நோக்கமாக இருந்தது. முக்கியமாக பாப்பரசர்கள் கிறிஸ்தவ மத்தினை உலகமெங்கும் பரப்ப முற்பட்டனர். நாடுகளைக் கண்டறிவதன் மூலம் கண்டறியப்பட்ட நாடுகளில் தமது சமயத்தினை பரப்ப முயன்றனர். இதன் மூலம் இம் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாப்பரசர்கள் தமது ஆதரவினை வழங்கினர். இக் காலத்தில் பெஸ்டர் ஜோன் எனும் ஆட்சியாளனின் கீழ் கீழைத் தேசத்தில் கிறிஸ்தவ அரசு ஒன்று உள்ளதென தவறான நம்பிக்கை ஒன்று இருந்தது. அந்த ஆட்சியாளனைத் தேடி கண்டறிந்து கிறிஸ்தவ சமயத்தை பரப்புவதற்கு அவனது உதவியை பெற வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நாடுகாண் பயணங்களுக்கு மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புக்களும் உதவியாக இருந்தது. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் வர்த்தகர் தரைவழியாக கீழைத்தேய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இவர் மேற்கொண்ட பயணம் பற்றி கி.பி 1295 இல் நூலொன்றினை வெளியிட்டார். இதில் தனது இந்திய ஜப்பானிய சீனப் பயணங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். இது ஐரோப்பியர் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அது போன்று தொலமியின் உலகப்படத்தில் நாடுகளின் அமைப்பு குறிப்பிடப்பட்டிருந்ததும் நாடுகாண் பயணங்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் கையில் இருந்த இந்து சமுத்திர வர்த்தக பேரரசை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பியரின் நோக்கமும் நாடுகாண் பயணங்களுக்கு காரணமாகும். தமது பிரதான அரசியல், பொருளாதார மத்திய நிலையமாக விளங்கிய கொன்ஸ்தாந்து நோபிள் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டமையானது கிறிஸ்தவர்களாகிய தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்தியாக அவர்கள் கருதினர். முஸ்லிகளின் பலம் வர்த்தகமும் அதன் மூலமாக அவர்கள் அதிகளவில் செல்வம் ஈட்டுவதுமே என அறிந்து அவர்களுக்கு போட்டியாக வர்த்த ரீதியாக பலம் பெறும் நோக்குடன் நாடுகாண் பயணங்களில் ஈடுபட்டனர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட நாடுகள் போர்த்துக்கல் நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட முதல் நாடு போர்த்துக்கல். சைபீரியக் குடாநாட்டின் முதல் நாடான போர்த்துக்கல் கடற் பிராந்தியத்தினூடாக நாடுகாண் பயணத்தில் ஈடுபடுவது இலகுவான காரியமாகக் காணப்பட்டது. கி.பி 15ம் ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் போர்த்துக்கல்லில் ஆட்சி புரிந்த 1ம் ஹென்றி கடல்வழிப் பாதைகளை கண்டறிவதில் ஆர்வமுடையவனாகக் காணப்பட்டான். மாலுமிகளுக்கு கப்பல் வசதி உட்பட பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்தார். இதன் காரணமாக இவர் கடலோடி ஹென்றி எனப்பட்டார். மாலுமிகளுக்கு பயிற்சி வழங்கும் நோக்குடன் இவரால் பயிற்சிசாலையொன்றும் அமைக்கப்பட்டது. இவரது முயற்சிகள் காரணமாக வேட்டைமுனை, கனேரியத் தீவுகள், மொடேரியா, ஹம்பியா, செனகல் என்பன கண்டறியப்பட்டன. பர்த்தலோமியஸ் டயஸ் இவர் போர்த்துக்கல் நாட்டினைச் சேர்ந்த மாலுமி. புதிய நாடுகளை கண்டுபிடிக்கின்ற நோக்குடன் 1487 நாடுகாண் பயணத்தினை மேற்கொண்டார். ஆபிரிக்காவின் தென்முனையைச் சுற்றி இந்தியாவை வந்தடையலாம் என்ற நோக்கம் இவரிடமிருந்தது. இந்நோக்கத்தினை நிறைவு செய்யும் பொருட்டு புறப்பட்ட இவர் ஆபிரிக்காவின் தென்முனையை அடைந்ததும் இவரது கப்பல் அப்பகுதியில் வீசிய புயல் காற்றில் சிக்கியது. இதனால் தனது பயணத்தை இவரால் தொடர முடியவில்லை. இதன் காரணமாக இப்பகுதிக்கு புயல்முனை எனப் பெயரிட்டார். இவர் பயணத்தை நிறுத்தி நாடு திரும்பிய போதும் இவரது பயணம் இந்தியாவை கண்டுபிடிப்பதற்கான புதிய நம்பிக்கையை குடுத்தது. இதன் காரணமாக இம் முனைக்கு ஜோன் மன்னன் நன்நம்பிக்கை முனை என பெயரிட்டார். வாஸ்கொடகாமா இவரும் போர்த்துக்கல் நாட்டவரே. கடற் பயணத்தை மேற்கொள்வதற்கு போர்த்துக்கல் அரசர் இமானுவேலின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. கி.பி 1494 இல் நான்கு கப்பல்களுடன் புறப்பட்ட வாஸ்கொடகாமா ஆபிரிக்காவின் தென்முனையை அடைந்து 1498 இல் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். இவரே கீழைத்தேச நாடுகளுக்கு கடல் வழியாக ஆபிரிக்காவின் தென்முனையச் சுற்றி முதன் முதலாக இந்தியா வந்தடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சிறப்பினைப் பெற்றார். கப்ரால் கி.பி 1500இல் 13 கப்பல்களில் கீழைத்தேசம் நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்த கப்ரால் திசைமறி தென் அமெரிக்காவை அடைந்ததாகவும். தென் அமெரிக்காவில் அவரால் கண்டறியப்பட்டதே பிரேசில் ஆகும். மகலன் போர்த்துக்கல் நாட்டினைச் சேர்ந்த மாலுமியான இவருக்கு ஸ்பெயின் நாட்டு அரசர் ஐந்தாம் சாள்ஸின் ஆதரவு இருந்தது. இவரின் துணையுடன் 1518 இல் உலகினைச் சுற்றி வர ஐந்து கப்பல்களுடன் புறப்பட்டார். தென் அமெரிக்காவின் முனையில் உள்ள பகுதியை அடைந்த இவர் அப்பகுதிக்கு மகலன் தொடுகடல் எனப் பெயரிட்டார். உண்மையில் இவருடைய இலக்கு மேற்குதிசையாகப் புறப்பட்டடு அத்திலாந்திக், பசுபிக், இந்து சமுத்திரங்களினூடாக உலகினை சுற்றி வருவதே. இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்த இவர் ஒரு பெருங்கடலுக்குள் பிரவேசித்தார். அக்கடல் அமைதியாக இருந்தமையினால் பசுபிக் சமுத்திரம் எனப் பெயரிட்டார். பின்பு கீழைத்தேய பகுதியில் உள்ள ஒரு தீவுக் கூட்டத்தினைச் சென்றடைந்தார். இதற்கு தனது இளவரசரின் நினைவாக பிலிப்பைன்ஸ் தீவுகள் எனப் பெயரிட்டார். இங்கே வாழ்ந்த பூர்வீக குடிகளுடன் நடைபெற்ற சண்டையில் மகலன் கொலை செய்யப்பட்டார். உலகினை வலம் வர வேண்டும் என்ற மகலனின் ஆசை நிறைவேறா விட்டாலும் பொதுவாக உலகினை கடல் மார்க்கமாக முதலில் வலம் வந்தவர் என்ற பெருமையை பெற்றார்.

ரஷ்ய புரட்சி

ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்...